search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக தலைவர் முக ஸ்டாலின்"

    பா.ஜ.க.வைக் கேவலப்படுத்துவதற்காகக் காவியைக் கேவலப்படுத்தினால் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இல.கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். #IlaGanesan #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் பா.ஜனதா உள்பட அனைத்துக்கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்த நிலையில் காவி குறித்து மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இல.கணேசன் எம்.பி. கூறியதாவது:-



    தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் முகநூல், டுவிட்டர் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். ஆனால், அவர் தலைவராகப் பதவி ஏற்றவுடன் பேசிய பேச்சு மிகவும் தவறான ஒன்று.

    இந்த தேசத்தில் காவி மயம் இருப்பது ஒன்றும் தவறு இல்லை. தமிழகத்தில் எந்த கிராமத்துக்குப் போனாலும் காவி அணிந்து வந்தால் வணங்குகிறார்கள். காவி புனிதமானது. பா.ஜ.க. ஒரு காவிக்கட்சி என்று சொன்னால் நான் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் பா.ஜ.க.வைக் கேவலப்படுத்துவதற்காகக் காவியைக் கேவலப்படுத்தினால் அதைப்பொறுத்துக் கொள்ள மாட்டேன்.

    தி.மு.க. தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் நிறைய கற்க வேண்டும். அப்படி இல்லையெனில் பா.ஜ.க. பாடம் கற்றுக் கொடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #IlaGanesan #MKStalin

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கட்சியில் படிப்படியாக பதவிகளில் இருந்து உயர்ந்தவர். அப்படிப்பட்டவரை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சிப்பது கண்டனத்துக்குரியது என்று காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். #DMK #Thirunavukkarasar
    கோவை:

    கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இன்று அவர் கூடுதலாக சில பகுதிகளுக்கு செல்வதால் அவர் கோவை வருவதில் தாமதம் ஆகி இருக்கிறது என்றார்.

    கேள்வி-எத்தனை கட்சிகள் கூட்டணி வைத்தாலும் பா.ஜனதாவை வீழ்த்த முடியாது என மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சொல்லி இருக்கிறாரே?

    பதில்- பொன்.ராதாகிருஷ்ணன் அப்படித்தான் சொல்லி ஆக வேண்டும். தமிழகத்தில் பா.ஜனதா கட்சிக்கு வாய்ப்பே இல்லை. தமிழகத்தில் பா.ஜனதா இப்போதும் வீழ்ந்து தான் கிடக்கிறது. அதை வீழ்த்தவேண்டிய அவசியம் இல்லை.

    கேள்வி- மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக தகுதி கிடையாது என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியிருக்கிறாரே?

    பதில்- தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கட்சியில் படிப்படியாக பதவிகளில் இருந்து உயர்ந்தவர். அனுபவம் மிக்கவர். அப்படிப்பட்டவரை அமைச்சராக இருக்கும் தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சிப்பது, தரம் தாழ்ந்து பேசுவது கண்டனத்துக்குரியது.

    கேள்வி-நீங்கள் பா.ஜனதாவுக்கு சென்றால் காங்கிரசுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருக்கிறாரே?

    பதில்- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் யோசனைகளுக்கு நன்றி. அவர், அவரது எதிர்காலத்தை பற்றி முடிவு செய்யட்டும். அவர் இது போன்று பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

    கேள்வி-அ.தி.மு.க.வின் உட்கட்சி பூசல் பற்றி என்ன கருதுகிறீர்கள்.

    பதில்- ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் விரிசல் ஏற்பட்டு உடைந்து இருக்கிறது. மதுசூதனனுக்கும், அமைச்சர் ஜெயகுமாருக்கும் இடைப்பட்ட பிரச்சினையை பஞ்சாயத்து செய்யும் நிலையில் முதல்-அமைச்சர் இருக்கிறார். ஒரே தலைமை இல்லாமல் இரட்டை குதிரையில் அ.தி.மு.க. சவாரி செய்வதால் கட்சியும், ஆட்சியும் சரியில்லாமல் இருக்கிறது. அ.தி.மு.க. போய் சேரவேண்டிய இடம், போய் சேராது.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #Thirunavukkarasar
    தி.மு.க. புதிய தலைவராக இன்று பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து தெரிவித்துள்ளார். #DMKThalaivarStalin #MKStalin
    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. புதிய தலைவராக இன்று பொறுப்பேற்ற ஸ்டாலின் தலைமை பொறுப்பிற்கு ஏற்ற போற்றுதலுக்குரிய பொருத்தமான தலைவர் தன் இளமைக் காலம் முதல் இன்று வரை திராவிட முன்னேற்ற கழக வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் அயராது பாடுபடும் ஆற்றல் மிக்க தலைவர் ஸ்டாலின்.

    தமிழின மக்கள் உரிமைகளை மீட்டெடுக்க நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு களம் சென்று வெற்றிகண்ட திராவிடத்தின் தீவிர பற்றாளர்.

    கருணாநிதி தி.மு.க.வை எப்படி கட்டுக்கோப்பாய் வழி நடத்தி சென்றாரோ அவரை போன்றே கழகத்தை செவ்வன வழி நடத்தும் ஒட்டு மொத்த ஆற்றலை ஒருங்கே பெற்ற சிறந்த தலைவர் ஸ்டாலின்.

    தனது கடின உழைப்பின் மூலம் படிப்படியாக உயர்ந்து தி.மு.க. பொறுப்பை ஏற்கின்ற தளபதி ஸ்டாலின் சீரிய தொண்டு சிறந்து விளங்கிடவும், கொள்கை சார்ந்த அரசியலில் வெற்றி மகுடம் சூடிடவும் புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் அன்புடன் வாழ்த்தி மகிழ்கின்றேன்.

    இவ்வாறு நமச்சிவாயம் கூறியுள்ளார். #DMKThalaivarStalin #MKStalin

    திமுக பொதுக்குழு கூட்டத்தில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் பேசும்போது, திமுகவின் கனவை நிறைவேற்றுவதற்காக இன்று புதிதாய் பிறந்திருப்பதாக தெரிவித்தார். #DMKThalaivarStalin #DMKGeneralCouncilMeet #MKStalin
    சென்னை:

    திமுக தொடங்கப்பட்டபோது பொதுச்செயலாளராக அண்ணா பதவி வகித்தார். அண்ணாவின் மறைவிற்கு பிறகு கருணாநிதி கட்சியின் தலைவர் ஆனார். தொடர்ந்து 50 ஆண்டுகள் தலைவராக அவர் பொறுப்பு வகித்து வந்த நிலையில், அவரது மறைவிற்கு பிறகு, கட்சியின் 2-வது தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  கட்சியின் பொதுக்குழுவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டார்.



    பின்னர் பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    திமுக தலைவராக நான் பொறுப்பேற்றதை பார்க்க கருணாநிதி இல்லையே என்பதே எனது ஒரே குறை. கருணாநிதி போல் மொழி ஆளுமை தனக்கு கிடையாது. நான் கருணாநிதியில்லை... அவரை போல் எனக்குப் பேச தெரியாது.

    திமுகவின் கனவை நிறைவேற்ற இன்று புதிதாய் பிறந்திருக்கிறேன். நீங்கள் பார்க்கும்... கேட்கும் ஸ்டாலின் வேறொருவன். சொந்த நலன்களை மறந்து தமிழக மக்களின் நலனுக்காக ஒன்று சேர்ந்து உழைப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஸ்டாலின் தலைவர் ஆனது தொடர்பான அறிவிப்பு வெளியானதும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற அண்ணா அறிவாலயத்திற்கு வெளியே கூடியிருந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். #DMKThalaivarStalin #DMKGeneralCouncilMeet #MKStalin
    ×